blog-post-image

பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் உணவு முறைகள்

Posted on 2025-05-22 03:02:48 by Dr. Sathish

பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் உணவு முறைகள்

பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் ஒவ்வொரு நபருக்கும், பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் சாதாரண உணவு வகைகள் உண்ணலாமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது., குறிப்பாக ஜீரணத்தில் பாதிப்பு ஏற்படுமா, கொழுப்பு சத்து மிகுந்த உணவு உண்ணலாமா? என்ற கேள்வியும் எழுகிறது. பொதுவாக பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் எல்லா உணவு வகைகளும் உண்ணலாம்.  பொதுவாக பித்தப்பையில் 30 லிருந்து 60 ML பித்தம் தேங்கி இருக்கும். பித்தப்பையுடன் இருக்கும் பித்த குழாயின் அளவு 4 லிருந்து 6 மில்லி மீட்டர் ஆகும். பித்தப்பை அகற்றப்பட்ட பின் பித்தக் குழாய் விரிந்து சுமார் 10 மில்லி மீட்டர் அளவை அடைகிறது. இந்த விரிவடைந்த பித்த குழாய் தேவையான அளவு பித்தத்தை தேக்கி வைக்கும் சக்தி கொண்டதால் பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் ஜீரணத்தில் பாதிப்பு ஏற்படுவதில்லை. இன்னும் குறிப்பாக பித்த குழாயின் அடிப்பகுதியில் இருக்கும் ஓ டி  என்ற வால்வு பித்தநீர் வடிதலை சீரமைக்கிறது. எனவே பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் உணவு பழக்கவழக்கத்தில் எந்த மாற்றமும் தேவையில்லை. ஆனால் நோயாளிக்கு வேறு பாதிப்புகள் இருந்தால் குறிப்பாக சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் அல்லது இருதய வியாதி இருந்தால் அதற்கேற்ப உணவு வகைகள் மாற்றி அமைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.