பித்தப்பை கற்கள் மருத்துவ சிகிச்சை
பித்தப்பை கற்களுக்கு மருத்துவ சிகிச்சை பெரிதளவில் உதவி செய்வதில்லை. பல வகையான மருத்துவ சிகிச்சைகள் முயற்சி செய்யப்பட்டு அவற்றால் பலன்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பல வகையான மருத்துவ சிகிச்சைகள் குறிப்பாக பித்த உப்பு மற்றும் ESWL போன்ற சிகிச்சை முறைகள் பயன்படுவது போல தோன்றினாலும் கூட 50 சதவீதத்திற்கு மேல் கற்கள் திரும்ப வருவதால் இந்த சிகிச்சை முறைகள் பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை. இன்னும் குறிப்பாக இந்த சிகிச்சை முறைகள் கொலஸ்ட்ரால் கற்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலான கற்கள்., பித்தநிறமியால் உருவானவை எனவே இந்த சிகிச்சை முறைகளில் பெரிதும் பயன் ஏதும் உள்ளதாக தெரிவதில்லை. மேலும் சாவிதுவார பித்தப்பை அகற்றும் சிகிச்சை கணிசமாக உதவுவதால் பித்தப்பை கற்களுக்கு மருத்துவ சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதில்லை.