தொடர் கணைய அழற்சிக்கு இ ஆர் சி பி சிகிச்சை முறை
கணைய அழற்சி
கணைய அழற்சிக்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக மதுப்பழக்கம், பித்தப்பை கற்கள், கணைய குழாய் அமைப்பில் மாறுதல்கள், பரம்பரை சம்பந்தப்பட்ட வியாதிகள், மற்றும் வளர்ச்சிதை மாற்றங்கள் சம்பந்தப்பட்ட வியாதிகளும் குறிப்பிடத்தக்கவை. பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட கணைய அழற்சி பெரும்பாலும் திடீர் கணைய அழற்சியாகவே இருக்கும். பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட கணைய அழற்சி மீண்டும், மீண்டும் திரும்ப வரலாம். பொதுவாக ஒரு கணைய குழாயே இருக்கும். ஆனால் ஒன்றுக்கு பதில் இரண்டு கணைய குழாய்கள் இருந்தால் அதை பேன்கிரியாடிக் டிவிஷம் என்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு கணைய அழற்சி விட்டு விட்டு வரலாம். பேன்கிரியாடிக் டிவிஷத்தில் பாதிக்கப்பட்டவர்க்கு பொது கணையக்குழாய் சற்று சிறியதாகவே இருக்கும். இதனால் கணைய நீர் ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு கணைய அழற்சி உருவாகின்றது. தொடர் மதுப்பழக்கம், மற்றும் பரம்பரை வியாதி சம்பந்தப்பட்ட கணைய அழற்சி தொடர் கணைய அழற்சியாக மாறுகிறது.
பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட கணைய அழற்சிக்கு முதலில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளியின் பொது உடல்நிலை சரிப்படுத்தப்பட வேண்டும். இதற்குப் பின் எம் ஆர் சி பி பரிசோதனையில் பித்தக் குழாயில் கற்கள் இருந்தால் அதை இ ஆர் சி பி மூலம் அகற்றப்பட வேண்டும். இதற்குப் பின் லேப்ராஸ்கோப்பி மூலம் பித்தப்பை அகற்றப்பட வேண்டும். ஆனால், பேன்கிரியாக் டிவிசத்தால் வரும் கணைய அழற்சிக்கு சிறு கணைய குழாயில் இ ஆர் சி பி மூலம் வடிக்கால் பொருத்துவதே சிகிச்சை முறையாகும். ஒருவேளை பேன்கிரியாடிக் டிவிசத்தால் வரும் கணைய அழற்சியே தொடர் கணைய அழற்சியாக மாறி கணையக்குழாய் விரிவடையும் தருணத்தில், கணைய குழாயுடன் சிறு குடல் இணைக்கும் பேன்கிரியாடிக் ஜெஜினாஸ்டமி என்னும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. தொடர் மதுப்பழக்கத்தால் வரும் கணைய அழற்சிக்கு மதுப்பழக்கத்தை நிறுத்துவதே முதன்மையான வைத்தியமாகும். மேலும் சிடி பரிசோதனைக்கு பின் மற்ற சிகிச்சை முறைகள் முடிவு செய்யப்படுகின்றன. தொடர் கணைய அழற்சியால் வயிற்று வலி தொடர்ந்து இருக்கும் போது, கணைய குழாயில் வீக்கம் இருந்தால் பேன்கிரியாடிக் ஜெஜினாஸ்டமி என்ற அறுவை சிகிச்சையும் கணைய குழாய் வீக்கம் இல்லாவிட்டால் இ ஆர் சி பி சிகிச்சை முறையும் பயனுள்ளதாக அமையும். பரம்பரை சம்பந்தப்பட்ட தொடர் கணைய அழற்சிக்கும் இந்த சிகிச்சை முறைகள் பயனுள்ளதாக இருக்கும்.
கணைய அழற்சியை பல பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தலாம்., குறிப்பாக இரத்த பரிசோதனைகளான லைப்பேஸ் மற்றும் அமைலேஸ் அளவு அதிகமாக இருக்கும் சில சமயங்களில் தொடர் கணைய அழற்சியால் பாதிக்கப்பட்டவரின் ரத்த அமைலேஸ் மற்றும் லைப்பேஸ் அளவு அதிகரிக்காமல் கூட இருக்கலாம். திடீர் கணைய அழற்சிக்கு அதன் காரணியை சரி செய்வதன் மூலம் கணைய அழற்சியிலிருந்து விடுபடலாம். ஆனால் தொடர் கணைய அழற்சி பாதிக்கப்பட்டு இருந்தால் அதன் காரணத்தை சரி செய்வதோடு, கணைய அழற்சியால் ஏற்பட்ட பின் விளைவுகளுக்கும் சிகிச்சை அளித்தல் வேண்டும். குறிப்பாக., தொடர் வலி இருந்தால் வலி நிவாரணியோடு இ ஆர் சி பி அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மற்றும் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டால் இன்சுலின் ஊசியும் ஜீரணத்தில் பாதிப்பு ஏற்பட்டால் கணையம் சம்பந்தப்பட்ட நொதிகளும் தேவைப்படலாம். தொடர் கணைய அழற்சியில் கணைய குழாயில் ஒரு சுருக்கம் இருந்தால் இ ஆர் சி பி சிகிச்சை முறையும் பல சுருக்கங்கள் இருந்தால் பேன்கிரியாடிக் ஜெஜினாஸ்டமி அறுவை சிகிச்சையும் பயனுள்ளதாக இருக்கும்.
திடீர் கணைய அழற்சியின் காரணிகள்
விட்டு விட்டு வரும் கணைய அழற்சி
தொடர் கணைய அழற்சி காரணிகள்
கணைய அழற்சிக்கான பரிசோதனைகள்
ரத்தப் பரிசோதனைகள்
கதிரியக்கவியல் பரிசோதனைகள்
எண்டோஸ்கோபி பரிசோதனைகள்
இரத்தப் பரிசோதனையின் போது இரத்தத்தில் அமைலேஸ் மற்றும் லைப்பேஸின் அளவு அதிகமாக இருந்தால் அதற்கு முக்கியமான காரணம் கணைய அழற்சி ஆகும். பித்தக்குழாய் கற்களினால் கணைய அழற்சி ஏற்படும் போது கல்லீரல் செயல்திறன் பரிசோதனையில் மாறுபாடுகள் இருக்கலாம். இரத்த பரிசோதனையில் கால்சியம் அளவு அதிகமாக இருந்தால் அதிகமான கால்சியமே கணைய அழற்சிக்கு காரணமாகும். அதே சமயம் கால்சியத்தின் அளவு குறைவாக இருந்தால் கணைய அழற்சியால் கால்சியம் குறைந்துள்ளது என எடுத்துக் கொள்ளலாம். இரத்தத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் டிரை கிளிசரேட்ஸ் அளவு அதிகமாக இருந்தால் இதுவே கணைய அழற்சிக்கு காரணமாகும். கணைய அழற்சியால் பாதிக்கப்பட்டவரின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருக்கும் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகமாக இருந்தால் அது நுண்ணுயிரின் தாக்கத்தை குறிக்கும். ரத்தத்தில் ப்ரோகால்சிடோனின் மற்றும் சிரியாடிவ் புரோட்டீன் அளவு அதிகமாக இருந்தால் அது கணைய அழற்சியின் வீரியத்தை குறிக்கிறது.
வயிற்றுக்கு செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை வயிற்றுக்கு செய்யப்படும் முதல் பரிசோதனை ஆகும். இதில் கணைய அழற்சி இருக்கின்றனவா என்பதையும் அதற்குக் காரணம் பித்தப்பை கல்லா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். கணையத்தை சுற்றி நீர்த்தேக்கம்