பித்தநீர் பாதையின் நுண்ணுயிரியல்
பொதுவாக பித்த குழாயில் இருக்கும் பித்த நீரில் நுண்ணுயிரிகளை பார்க்க முடிவதில்லை. ஆனால், பித்தப்பையில் இருக்கும் கல் அல்லது பித்த குழாயை அடைக்கும் கல்லால் நுண்ணுயிரின் தாக்கம் ஏற்படலாம். பித்த குழாயில் இருக்கும் பெரும்பாலான பாக்டீரியா கிராம் நெகட்டிவ் ஏரோப்ஸ் என்னும் பிரிவை சார்ந்தவை ஆகும். பொதுவாக பித்தக் குழாயில் இருக்கும் நுண்ணுயிரி முன் சிறு குடலில் இருந்து மேலே செல்வதாகும் சில சமயங்களில், ரத்தத்தில் இருக்கும் நுண்ணுயிரிகூட பித்த நீரை அடையலாம். பெரும்பாலான நுண்ணுயிரிகள் பி சி ஆர் என்னும் சிறப்பு பரிசோதனை மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக என்ட்ரோகோகஸ், சூடோமோனாஸ், ஏறுஜினோசா, பாக்டீராட்ஸ், ஸ்டேப்பிலோகார்க்ஸ், மற்றும் புரோட்டஸ் பொதுவாக காணப்படுகின்றன.