blog-post-image

பித்தப்பை கற்கள் அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகள்

Posted on 2025-05-12 02:42:04 by Dr. Sathish

பித்தப்பை கற்கள் அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகள்

பொதுவாக வயிற்று வலியுடன் வரும் நோயாளிக்கு வலிக்கு காரணமான நோயை கண்டுபிடிக்க பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்ப பரிசோதனைகளில் பித்தப்பை கற்கள் கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சை முறை அறுவை சிகிச்சை என்பதால் அறுவை சிகிச்சைக்கு தகுதி உடையவராக இருக்கிறாரா என்று பார்க்க கீழே வரும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

 இரத்த பரிசோதனைகள்

1) ஹீமோகுளோபின் அளவு

2) நிரம்பிய செல் அளவு

3) இரத்த கசிவு நேரம்

4) இரத்தம் உறையும் நேரம்

5) புரோத்திரோமின் நேரம்

6) ஐ என் ஆர்

7) இரத்த சர்க்கரை

8) இரத்த யூரியா

9) இரத்த கிரியாடினின்

10) இரத்த வகை

11) இரத்த ஹெச் பி என் சி - சர்க்கரை நோயாளிகளுக்கு

12) தைராய்டு ஹார்மோன்களின் அளவு- தைராய்டு சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு

13) வைரல் பரிசோதனைகள் குறிப்பாக கல்லீரல் அழற்சி  சம்பந்தமான பி மற்றும் சி வைரஸ் மற்றும்  ஹெச் வி வைரஸ்

14) மார்பு எக்ஸ்ரே

15) இ சி ஜி

16) எக்கோ பரிசோதனை- இதய வியாதி சந்தேகப்படுபவர்களுக்கு

17) சிறப்பு நிபுணர் கருத்து

18) இதய சிகிச்சை நிபுணர்- இருதய வியாதி உடையவர்கள் அல்லது  50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு

19)நீரிழிவு நோய் நிபுணர் -சர்க்கரை வியாதி உடையவர்களுக்கு

20) மார்பக நோய் நிபுணர்- நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு

21) சிறுநீரக நிபுணர்- சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு

22) நரம்பியல் நிபுணர்- நரம்பு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களுக்கு

23)இரத்த சிகிச்சை நிபுணர்- இரத்த சிதைவு மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு

மேற்கண்ட பரிசோதனைகளுக்கு பின் நோயாளி மயக்க மருந்து நிபுணரின் மதிப்பீட்டிற்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். இத்தருணத்தில் மயக்க மருந்து நிபுணர் நோயாளியின் தேவையான தகவல்களை பெற்று மயக்க மருந்து மதிப்பீடு செய்வார். இதில் குறிப்பாக நோயாளிக்கு இருக்கும் மற்ற வியாதிகள் பற்றி விரிவாக ஆராயப்படும். குறிப்பாக, இருதய நோய் அல்லது நீரழிவு நோய் போன்றவைகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றதா என்பதை கண்டறிதல் மிகவும் முக்கியம். அத்துடன் கடந்த காலங்களில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதா, எப்போதாவது மயக்க மருந்து அளிக்கப்பட்டுள்ளதா என்பதை பற்றி அறிவது முக்கியம். இத்துடன் மயக்க மருந்து கொடுப்பதற்கு தொண்டை பகுதி நன்றாக இருக்கிறதா மற்றும் பொதுவான உடல்நிலை நன்றாக இருக்கிறதா என்பதை பார்த்து தெரிந்து கொள்வது முக்கியம்.  சில சமயங்களில் நுண்ணுயிரியின் தாக்கம் அதிகமாய் இருந்து பொது உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தால் மயக்க மருந்து கொடுப்பதில் சிக்கல்கள் இருப்பதை நோயாளியுடன் வருபவருக்கு தெரியப்படுத்துவது முக்கியம்.

 அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசீலனை

சில நோயாளிகள் இருதய மற்றும் நீரிழிவு நோய்க்கு தொடர்ந்து மருந்து எடுப்பவர்களாக இருக்கலாம். குறிப்பாக இரத்தம் உறையும் சக்தியை குறைக்கும் ஆன்ட்டி பிளேட்ட்லெட் மருந்துகள் எடுப்பவராக கூட இருக்கலாம். இத்தருணத்தில் சில முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் மிகவும் முக்கியம்.

  1. A) ஆன்ட்டி பிளேட்லெட் மருந்துகள் அறுவை சிகிச்சைக்கு ஐந்து நாட்களுக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். ஒருவேளை நிறுத்தப்படாவிட்டால் அறுவை சிகிச்சையின் போது கட்டுப்படுத்த முடியாத ரத்தக்கசிவு வரலாம்.
  2. B) தைராய்டு சம்பந்தப்பட்ட மருந்துகள் அறுவை சிகிச்சை அன்று வரை எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
  3. C) இருதய மற்றும் ரத்த அழுத்த மருந்துகளும் அறுவை சிகிச்சை நடக்கும் நாள் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  4. D) நீரிழிவு நோய் இருந்தால் வாயால் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகள் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு பதில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவிற்கு ஏற்ப இன்சுலின் ஊசி வழியாக செலுத்தப்படும்.