blog-post-image

லேப்ரோஸ்கோபியில் (ஐ சி ஜி) இன் பங்கு

Posted on 2025-05-12 03:08:16 by Dr. Sathish

லேப்ரோஸ்கோபியில் ( சி ஜி) இன் பங்கு

சி ஜி அல்லது இண்டோ சயனைன் பச்சை என்பது ஒரு ஒளிரும் சாயமாகும். இந்த ஒளிரும் சாயம் பித்தப்பை அகற்றும்  லேப்ரோஸ்கோப்பி பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு 45 நிமிடத்திற்கு முன்பு இரத்தக் குழாய் வழியாக செலுத்தப்படுகிறது. இந்த சாயம் லேப்ரோஸ்கோபி பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது பித்த நாளங்களை அடையாளப்படுத்த உதவுவதால் பித்த நாளங்களின் பாதிப்பை தவிர்க்க உதவுகின்றது. இந்த சாயம் பயன்படுத்தும் போது லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவியும் இந்த சாயத்தை கண்டறியும் திறன் படைத்ததாக அமைய வேண்டும். இந்த குறிப்பிட்ட அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தும் ஒளியில் இன்பிஃராடெட் மற்றும் கேனால்ட் அலைகள் இருக்கும் இண்டோசயனைன் பச்சை என்னும் சாயம் பித்த நாளங்களின் தன்மையை கண்டறிய உதவுவதாகும். இது நீரில் கரையும் சாயமாகும். இது கல்லீரலில் இருந்து பித்தநாளங்கள் வழியாக சிறு குடலை அடைகின்றன. பொதுவாக பித்த நாளங்களில் எட்டு நிமிடங்கள் தேங்கி இருக்கும் முன் சிறு குடலை அடைந்த இன்டோசைனின் பச்சை சாயம் திருப்பி குடலால் உறிஞ்சப்படுவதில்லை. இரத்தத்தில் இருக்கும் இண்டோ சயனைன் பச்சை கல்லீரலால் வெளியேற்றப்படுவதற்கு கல்லீரல் இரத்த ஓட்டம் மற்றும் கல்லீரலின் செயல் திறன் மிக முக்கியமானவை ஆகும். இந்த இன்டோசயனைன் பச்சையில் அயோடின் கலந்துள்ளதால் அயோடின் ஒவ்வாமை உள்ளவர்க்கு இது பயன்படுத்துவது இயலாது.

இதன் முக்கியமான பயன்களாவன:

1) பித்தப்பையையும் பித்த நாளங்களையும் தெளிவாக காட்டுகின்றன.

2) பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது பித்த நாளங்கள் பாதிக்கப்படாமல் இருக்க உதவுகின்றன.

3) இந்த செயல்முறைக்கு நேரம் அதிகமாக தேவைப்படுவதில்லை.

4) பித்த நாளங்களை காண்பதற்கு புது கருவியும் தேவையில்லை.

5) பித்தப்பை அறுவை சிகிச்சையில் ஐ ஓ சி என்னும் பரிசோதனை தேவைப்பட்டால் அங்கு எக்ஸ்ரே கதிர்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்டோசயனைன் பச்சை பயன்படுத்துவதன் மூலம் எக்ஸ்ரே பயன்பாட்டை தவிர்க்கலாம். எனவே குறிப்பாக பித்தப்பையின் அறுவை சிகிச்சையின் போது பித்தப்பை நாளங்களின் மாறுதல்களை கண்டுபிடிப்பதோடு அதற்கு பாதிப்பு வராமல் குறைந்த செலவில் அறுவை சிகிச்சையை செய்து முடிக்க முடியும்.