blog-post-image

மினி லேப்ராஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சை

Posted on 2025-05-12 03:15:06 by Dr. Sathish

மினி லேப்ராஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சை

லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை என்பதை வயிற்றை திறக்காமல் சிறு துவாரங்கள் வழியாக செய்யப்படும் அறுவை சிகிச்சை ஆகும். பொதுவாக செய்யப்படும் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைகளில் பித்தப்பை அறுவை சிகிச்சை மிக முக்கியமானது. லேப்ராஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது இரண்டு 10மில்லி மீட்டர் துவாரங்களும், இரண்டு 5 மில்லி மீட்டர் துவாரங்களும் போடப்பட்டு, அறுவை சிகிச்சை முடிக்கப்படுகின்றன. மினி லேப்ராஸ்கோபி பித்தப்பை அகற்றும்  அறுவை சிகிச்சையின் போது தொப்புளை சுற்றி போடப்படும் 10 மில்லி மீட்டர் துவாரத்திற்கு பதிலாக 5 மில்லி மீட்டர் துவாரமே போடப்படுகின்றது. இதனால் மினி லேப்ராஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது மூன்று 5 மில்லி மீட்டர் துவாரங்களும், ஒரு 10 மில்லி மீட்டர் துவாரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதனால், தொப்புளை சுற்றிய துவாரத்தில் வலி குறைவாகவே இருக்கும். அத்துடன் சில சமயங்களில் 10 மில்லி மீட்டர் துவாரம் வழியாக குடல் இறக்கம் வரலாம். 5 மில்லி மீட்டர் துவாரம் பயன்படுத்துவதால் குடல் இறக்கம் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு. உயர்தர லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை கருவிகளும் அறுவை சிகிச்சை நிபுணரின் அனுபவமும் இந்த மினி லேப்ராஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு இன்றியமையாத ஒன்றாகும்.