வயிற்றில் தவறிய பித்தப்பை கற்கள்
லேப்ராஸ்கோபி பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது பொதுவாக பித்தப்பை திறக்கப்படுவதில்லை. ஆனால் சில சமயங்களில் பித்தப்பை அழுகி இருந்தாலோ அல்லது பித்தப்பையில் ஓட்டை விழுந்து இருந்தாலோ அல்லது அறுவை சிகிச்சையின் போதோ பித்தப்பையில் துவாரம் ஏற்படலாம். இவ்வாறு துவாரம் ஏற்பட்டால் பித்தப்பையினுள் இருக்கும் பித்தப்பை கற்கள் வயிற்றினுள் சிதற வாய்ப்புள்ளது. இவ்வாறு சிதறிய கற்கள் அகற்றப்பட வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். அகற்றப்படவில்லை என்றால், நாளடைவில் வயிற்றினுள் சீதம் தேங்கலாம். மற்றும் குடல் அடைப்பு, புண்ணில் நுண்ணுயிரியின் தாக்கம் மற்றும் பிஸ்ட்டுலா போன்றவை வர வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறாக, சிதறிய கற்கள் சில சமயங்களில் கல்லீரலின் பின்பகுதியில் மறைய வாய்ப்புள்ளது. எனவே பித்தப்பை கற்கள் சிதறியது கண்டறியப்பட்டால் அவ்வப்போது அதை அகற்றுவது மிகவும் முக்கியம். பித்தப்பை கற்கள் சிதறியதற்காக லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையில் இருந்து திறந்த அறுவை சிகிச்சைக்கு மாற்ற வேண்டும் என்பது அவசியம் இல்லை. பித்தப்பை கற்கள் வயிற்றினுள் சிதறினால் அனைத்து கற்களையும் அகற்றுவதோடு சுத்த நீரினால் வயிறு நன்றாக கழுவப்பட வேண்டும். அத்தோடு அறுவை சிகிச்சை பதிவேட்டிலும் பித்தப்பை கற்கள் வயிற்றினுள் சிதறியது பற்றி பதிவு செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.