blog-post-image

லேப்ராஸ்கோபி மறுபித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

Posted on 2025-05-20 16:42:12 by Dr. Sathish

லேப்ராஸ்கோபி மறுபித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

பொதுவாக பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையில் முழு பித்தப்பையுடன் பித்தப்பை குழாயின் பெரும் பாகமும் அகற்றப்படுகின்றது. இவ்வாறு அகற்றப்படாத நேரத்தில் மீதி இருக்கும் பித்தப்பை அல்லது பித்தப்பை குழாயில் கல் தேங்கிருக்க வாய்ப்புள்ளது. சில சமயங்களில் புதிய கல் கூட உருவாகலாம். இவற்றின் வெளிப்பாடு பித்தப்பை கல் போன்ற   வயிற்று வலி, வலி உடன் கூடிய வாந்தி ஆகும். பொதுவாக செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில் இதை யூகிக்க முடியும் ஆனால் எம்.ஆர்.சி.பி பரிசோதனையே இதை உறுதிப்படுத்தும். எம் ஆர் சி பி பரிசோதனையில் மீதி இருக்கும் பித்தப்பை குழாய் அல்லது பித்தப்பையில் கற்கள் இருந்தால் அவற்றை மறு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மறு அறுவை சிகிச்சை லேப்ராஸ்கோபி என்றாலும் கூட ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்பட்ட குடல் ஒட்டுதல்கள் செய்முறை சிக்கல்களை உருவாக்கலாம். எனவே லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முடியாத தருணத்தில், திறந்த அறுவை சிகிச்சை மூலம் மீதி இருக்கும் பித்தப்பை குழாயையும் பித்தப்பையையும் அகற்றுவதால் வலி முழுமையாக மறைந்து விடும்.