திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பித்தக் குழாய் கற்கள் அகற்றுதல் மற்றும் பித்த குழாயை முன் சிறு குடலுடன் இணைத்தல்
இந்த அறுவை சிகிச்சை முறை பித்தப்பை கற்கள் உடன் பித்த குழாயில் அதிக அளவு கற்கள் இருப்பின், அறுவை சிகிச்சைக்கு பின் பித்த குழாயில் திரும்பவும் கற்கள் வர வாய்ப்பு அதிகமாக இருப்பதால், இந்த மாற்று பாதை அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகின்றது. சில சமயங்களில் பித்த குழாய் முழுக்க பித்த குழாய் கற்கள் இருந்தால் அறுவை சிகிச்சைக்கு பின்கூட பித்தக் குழாயில் கற்கள் வரலாம். இவ்வாறு கற்கள் வராமல் இருக்க பித்தக் குழாயும் முன் சிறு குடலும் இணைக்கப்படுகின்றது. இம்முறை., அறுவை சிகிச்சை முடிவு செய்யப்பட்டால் உரிய பரிசோதனைகளுக்கு பின் முழு மயக்கம் அல்லது தண்டுவட மயக்கம் மூலம் வயிறு திறக்கப்படுகிறது. பின்பு பித்தப்பை அகற்றப்படுகிறது. பித்தப்பை அகற்றப்பட்ட பின் பித்த குழாய் கண்டறியப்பட்டு இரண்டு தசை நார்களுக்கு இடையில் பித்த குழாய் திறக்கப்படுகிறது.
பின்பு குழாயில் இருக்கும் அனைத்து கற்களும் அகற்றப்பட்டு சுத்தமான நீரால் சுத்தம் செய்யப்படுகிறது. இதற்கு பின், முன் சிறு குடலின் மேற் பகுதியில் சுமார் 2 சென்டிமீட்டர் அளவுக்கு திறக்கப்பட்டு, பித்த குழாயும், முன் சிறு குடலும் தசைனார்களால் இணைக்கப்படுகிறது. இதனால், பித்த குழாயில் மீண்டும் கற்கள் உருவானால் இந்த மாற்று பாதை வழியாக பித்த குழாய் கற்கள் முன் சிறு குடலை அடைகின்றன. பித்த குழாயில் மீண்டும் மீண்டும் கற்கள் உருவானால் பித்தக் குழாய் முன் சிறு குடல் மாற்றுப்பாதை அறுவை சிகிச்சை மிகப் பயனுள்ளதாக அமையும்.
சம்பு சின்ட்ரோம்
சம்புசின்ட்ரோம் என்பது பித்தக்குழாய் முன் சிறு குடல் மாற்றுப்பாதை அறுவை சிகிச்சைக்கு பின் பித்த குழாயின் கீழ் பகுதியில் உருவாகும் கற்களைக் குறிக்கும். பொதுவாக பித்துக்குழாய் முன் சிறுகுடல் மாற்றுப்பாதை அறுவை சிகிச்சைக்கு பின் பித்தமானது முன்சிறுகுடலுக்கு நேரடியாகவே செல்கின்றது. இத்தருணத்தில், பித்த குழாயின் கீழ் பகுதியில் பித்தம் தேங்கி கற்கள் உருவாக காரணமாகின்றன. இத்தருணத்தில்., நோயாளிக்கு வலியுடன் காய்ச்சல் வரலாம். எம் ஆர் சி பி பரிசோதனை மூலம் இதை உறுதிப்படுத்தலாம். இதற்கு இ ஆர் சி பி சிகிச்சை முறை உகந்த ஒன்றாகும்.