blog-post-image

திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பித்த குழாய் கற்கள் அகற்றுதல் மற்றும் பித்த குழாய் சிறுகுடல் மாற்றுப் பாதை அறுவை சிகிச்சை

Posted on 2025-05-20 20:39:46 by Dr. Sathish

திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பித்த குழாய் கற்கள் அகற்றுதல் மற்றும் பித்த குழாய் சிறுகுடல் மாற்றுப் பாதை அறுவை சிகிச்சை

இது அரிதாக செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சை ஆகும். இதில் பித்த குழாயும் சிறுகுடலின் ஒரு பகுதியும் இணைக்கப்பட்டு பித்தம் வடிய மாற்றுப்பாதை உருவாக்கப்படுகின்றது. பொதுவாக பித்தப்பை., பித்தப்பை குழாய் வழியாக பித்த குழாயுடன் இணைக்கப்பட்டு இருக்கும். ஆனால் பித்தப்பையில் ஏற்படும் தொடர் அழற்சியால் பித்தப்பைக்கும்  பித்த குழாய்க்கும் அசாதாரணமான தொடர்பு ஏற்படுகின்றது. சில சமயங்களில் பித்த குழாயில் கூட அதிக அளவில் பாதிப்பு இருக்கலாம். இத்தருணத்தில் திறந்த அறுவை சிகிச்சையின் மூலம் பித்தப்பை அகற்றப்பட்டு அசாதாரணமான இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இதற்குப் பின் பித்த குழாயின் பாதிப்பு அதிகமாக இருந்தால் பித்தக்குழாய் ஆனது சிறு குடலுடன் இணைக்கப்படுகிறது.

பித்தப்பை அகற்றப்பட்டு அசாதாரணமான இணைப்பு துண்டிக்கப்பட்ட பின் பித்தக் குழாயில் இருக்கும் கற்கள் அனைத்தும் அகற்றப்பட்டனவா என்பது உறுதி செய்யப்படுகிறது. பின்பு சிறுகுடலின் ஒரு பகுதி பித்தகுழாயுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு ரு என் ஒய் என்ற  சிறு குடல் உருவாக்கப்படுகிறது. இந்த சிறு குடல் பகுதி பித்தக்குழாயுடன் இணைக்கப்படும்போது பித்த குழாய் சிறுகுடல் மாற்று பாதை உருவாகிறது. இந்த அறுவை சிகிச்சை அரிதாக செய்யப்படும் அறுவை சிகிச்சை என்பதோடு பெரிய அறுவை சிகிச்சையும் என்பது குறிப்பிடத்தக்கது.