blog-post-image

பெர்குடேனியஸ் கோலிசிஸ்டாடமி

Posted on 2025-05-22 02:04:27 by Dr. Sathish

 இந்த சிகிச்சை முறையில் நுண்ணுயிரியால்  பாதிக்கப்பட்ட பித்தப்பையில் இருக்கும் பித்த நீர்வடி குழாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. பித்தப்பையின் தொடர் நுண்ணுயிரின் தாக்கத்தால் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படும் போது நோயாளியின் உடல்நிலை பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு உகந்ததாக இருக்காது. இத்தருணத்தில் நோயாளியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பித்தப்பையில் உள்ள பாதிக்கப்பட்ட பித்தநீர் வடிக்குழாய் மூலம் வெளியேற்றப்படுகிறது. பொதுவாக இந்த செயல்முறை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியுடன் செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை முறையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியுடன் பித்தப்பை கண்டறியப்படுகிறது. பின்னர், நுண்ணிய ஊசியானது வலது பக்கம் உள்ள தோல் வழியாகவும் கல்லீரல் வழியாகவும் பித்தப்பைக்குள் செலுத்தப்படுகிறது. இந்த மெல்லிய ஊசி பித்தப்பைக்குள் இருக்கிறதா என்பதை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உறுதி செய்கிறது. இதற்கு பின் இந்த ஊசியின் உதவியுடன் பன்றிவால் போன்ற வளைந்த வடிக்குழாய் பித்த பயனுள் செலுத்தப்படுகிறது. இந்த வடிகுழாயின் ஒரு பகுதி பித்தக் குழாயின் உள்ளும் மறுமுனை வயிற்றின் வெளியிலும் இருப்பதால் பித்தப்பையில் இருக்கும் பாதிக்கப்பட்ட பித்த நீரை இது வெளியேற்றுகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட பித்த நீர் வெளியேறுவதால் நோயாளியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது. இதற்குப் பின் பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நோயாளிக்கு ரத்தம் உறையும் சக்தியில் மாறுதல், கல்லீரல் சுருக்கம் மற்றும் வயிற்றில் நீர் சேர்ந்து இருந்தால் இந்த சிகிச்சை முறை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.