blog

Home / blog

லேப்ரோஸ்கோபியில் (ஐ சி ஜி) இன் பங்கு

லேப்ரோஸ்கோபியில் (ஐ சி ஜி) இன் பங்கு

  • ஐ சி ஜி என்னும் எண்டோசைன் பச்சை ஒரு ஒளிரும் தன்மை கொண்ட சாயம் ஆகும்.
  • இந்த சாயம் அறுவை சிகிச்சைக்கு 45 நிமிடத்திற்கு முன்பாக இரத்தக் குழாய் வழியாக செலுத்தப்படுகிறது.
  • இது பித்தப்பையையும் பித்தக்குழாய் பகுதிகளையும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையின் போது கண்டறிய உதவுகின்றது.
  • அறுவை சிகிச்சையின் போது தேவைப்படும் கொலஞ்சியோகிராஃபி என்ற பரிசோதனையை தவிர்க்க உதவுகின்றது.
  • அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நேரமும் குறைகின்றது.
  • அயோடின் ஒவ்வாமை இருந்தால் இந்த சாயம் பயன்படுத்துதல் கூடாது.

பித்தப்பை கற்கள் சிகிச்சை முறைகள்

பித்தப்பை கற்கள் சிகிச்சை முறைகள்

  • பித்தப்பையை கல்லுடன் அகற்றுவதே முதன்மை சிகிச்சையாகும்.
  • பித்தப்பை கற்கள் இருக்கும் பித்தப்பை சரியாக வேலை செய்யாததால் பித்தப்பையும் அகற்றப்படுகின்றன.
  • பாதிக்கப்பட்ட பித்தப்பையை அகற்றுவதால் ஜீரணத்தில் எந்த பாதிப்பும் வருவதில்லை.
  • சிறுவயதாகயிருந்தால் இரத்த சிதைவு மஞ்சட்காமாலை சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் முக்கியம்.
  • பித்தக் குழாயில் நுண்ணுயிரியின் பாதிப்பு இருந்தால் உயிர் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தேவைப்படலாம்.
  • பித்தக்குழாய் கற்களுக்கு இ ஆர் சி பி என்ற சிகிச்சை முறை தேவைப்படுகின்றது.

மினி லேப்ராஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சை

மினி லேப்ராஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சை

  • முதல் சாவி துவாரம் ஐந்து மில்லி மீட்டர் உள்ளதாக இருக்கும்.
  • பித்தப்பையுடன் பித்தப்பை கற்களும் அகற்றப்படுகின்றன.
  • முதல் துவாரம் மிகச்சிறியதாக இருப்பதால் வலி மிகக் குறைவாகவே இருக்கும்.
  • அறுவை சிகிச்சை செய்த இடத்தில் குடலிறக்கம் வர வாய்ப்பு இல்லை.
  • இந்த அறுவை சிகிச்சைக்கு உயர்தர லேப்ராஸ்கோப்பிக் கருவிகள் தேவைப்படுகின்றன.
  • பெரும்பாலான பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை இம்முறையிலேயே செய்து முடிக்கலாம்.

வயிற்றில் தவறிய பித்தப்பை கற்கள்

வயிற்றில் தவறிய பித்தப்பை கற்கள்

  • பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது பித்தப்பையனுள் இருக்கும் கற்கள் வயிற்றினுள் நழுவலாம்.
  • பித்தப்பை கற்கள் வயிற்றினுள் நழுவுவதற்கு காரணம் பித்தப்பையில் ஏற்படும் ஓட்டை குறிப்பாக நோயின் தீவிர தாக்கமோ அல்லது அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் ஓட்டையோ காரணமாக அமையலாம்.
  • பித்தப்பையினுள் அதிக கற்கள் இருப்பின் கற்கள் வயிற்றினுள் நழுவ வாய்ப்பு அதிகம்.
  • நழுவிய கற்கள் அகற்றப்பட வேண்டும்.
  • வயிற்றினுள் நழுவிய கற்கள் வயிற்றினுள் நுண்ணுயிரியின் தாக்கம் உருவாக காரணமாகலாம்.
  • அறுவை சிகிச்சையின் போது வயிறு நன்றாக சுத்தமான நீரால் கழுவப்படல் வேண்டும்.

லேப்ராஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சை- அறுவை சிகிச்சைக்கு பின் பராமரிப்பு

லேப்ராஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சை- அறுவை சிகிச்சைக்கு பின் பராமரிப்பு

  • அறுவை சிகிச்சைக்கு 6 மணி நேரத்திற்கு பின் நீர் உணவு உண்ணலாம்.
  • அறுவை சிகிச்சைக்கு அடுத்த நாள் வீடு திரும்பலாம்.
  • பித்தப்பை அழற்சி அதிகமாக இருப்பின் வீடு திரும்புவதற்கு ஓரிரு நாட்கள் ஆகலாம்.
  • அறுவை சிகிச்சைக்கு 24 மணி நேரத்திற்கு பின் அனைத்து உணவும் உண்ணலாம்.
  • பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் ஜீரணத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை.
  • பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் கொழுப்புச்சத்து உணவு உண்பதில் தடை ஏதுமில்லை.