லேப்ராஸ்கோபிக் அகன்ற பித்தப்பை அறுவை சிகிச்சை
- பொதுவாக பித்தப்பை புற்று வியாதிக்கு செய்யப்படுகின்றது.
- பித்தப்பையை சுற்றி இருக்கும் கல்லீரலின் சுமார் ஒரு சென்டிமீட்டர் அகற்றப்படுகிறது.
- பித்தப்பை சுற்றி இருக்கும் நிணநீர் கட்டி மற்றும் நிணநீர் குழாய்கள் அகற்றப்படுகின்றன.
- இந்த சிகிச்சை முறை பித்தப்பை புற்று வியாதியை சுற்றியுள்ள புற்று வியாதி பரவிய சதையை அகற்ற உதவுகின்றது.
- இந்த அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் இரத்த கசிவு கவனமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
- என்டோ பெஹ் என்னும் வயிற்று உள் பை மூலமே அகற்றப்பட்ட பித்தப்பையும் கட்டியும் வெளியே எடுக்கப்பட வேண்டும்.