blog

Home / blog

லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையில் இருந்து திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையில் இருந்து திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

  • நோயின் தாக்கம் எதிர்பாராத விதமாக தீவிரமாக இருத்தல்.
  • பித்த நாளங்களில் உள்ள அமைப்பில் மாறுதல்கள்.
  • அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் எதிர்பாராத இரத்தக் கசிவு.
  • பக்கத்து உறுப்புகளை கண்டறிவதில் சிரமம் இருத்தல்.
  • எதிர்பாராத விதமாக லேப்ராஸ்கோப்பி கருவியில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு.

திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

  • நோயின் தாக்கம் அதிகமாக இருந்து நோயாளியின் உடல்நிலை மோசமாக இருத்தல்.
  • ஏற்கனவே வயிற்றின் மேல் பகுதியில் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து இருத்தல்.
  • பித்தப்பை கல்லுடன் பெரிய பித்தக் குழாய் கற்கள் இருந்து திறந்த அறுவை சிகிச்சை தேவைப்படுதல்.
  • பித்தப்பையில் ஓட்டை விழுந்து வயிற்றினுள் தீவிர அழற்சி இருத்தல்
  • பித்தப்பை கல்லுடன் மிரிசி சின்ட்ரோம் போன்ற பிரச்சனைகள் இருத்தல்.
  • லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் தொழிற்நுட்ப கோளாறுகள்.

லேப்ராஸ்கோபி சப்டோட்டல் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

லேப்ராஸ்கோபி சப்டோட்டல் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

  • இந்த அறுவை சிகிச்சையின் போது பித்த குழாயின் அருகில் இருக்கும் பித்தப்பையின் ஒரு பகுதி அகற்றப்படாமல் விடுவிக்கப்படும்.
  • பித்தக்குழாய்க்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
  • கேலோட்டின் முக்கோணப்பகுதி உரைந்திருக்கும் நேரங்களில் இச்சகிச்சை முறை பயனுள்ளதாக இருக்கும்.
  • எஞ்சியிருக்கும் பித்தப்பையில் இருந்து அனைத்து கற்களும் அகற்றப்பட வேண்டும்.
  • எஞ்சியிருக்கும் பித்தப்பையில் மீண்டும் கற்கள் உருவாகலாம்.
  • மறு பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

லேப்ராஸ்கோப்பிக் பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் அதே வலி வருதல்

லேப்ராஸ்கோப்பிக் பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் அதே வலி வருதல்

  • பித்தப்பை குழாயில் கல் தங்கியிருத்தல்.
  • அசாதாரணமான நீண்ட பித்தப்பை குழாயில் அறுவை சிகிச்சைக்கு பின் கற்கள் உருவாதல்.
  • கண்டுபிடிக்கப்படாத பித்தக்குழாய் கற்கள்.
  • பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது பித்தப்பை கற்கள் பித்தக் குழாயில் நழுவுதல்.
  • எஞ்சியிருக்கும் பித்தப்பையில் கற்கள் உருவாதல்.
  • ஆம்புலா பகுதியில் இருக்கும் அகற்றப்படாத பித்தக்குழாய் கற்கள்.

லேப்ராஸ்கோபி மறுபித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

லேப்ராஸ்கோபி மறுபித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

  • சப்டோட்டல் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் செய்யப்படும் அறுவை சிகிச்சை ஆகும்.
  • பித்தப்பை குழாயில் தேங்கியிருக்கும் கல்லால் பித்தப்பை குழாய் வீங்கி வலி உருவாவதால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
  • பொதுவாக அறுவை சிகிச்சையின் போது திடமான குடல் ஒட்டுதல் இருக்கலாம்.
  • முடிந்தவரை லேப்ராஸ்கோப்பி முறை சிறந்ததாகும்.
  • அறுவை சிகிச்சைக்கு முன் செய்யப்படும் எம் ஆர் சி பி பயனுள்ளதாக இருக்கும்.
  • லேப்ராஸ்கோப்பி முறை முடியாத தருணத்தில் திறந்த முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.