blog

Home / blog

பித்தப்பை கல்லின் பொது வெளிப்பாடுகள்

பித்தப்பை கல்லின் பொது வெளிப்பாடுகள்

  • உணவிற்குப் பின் வயிற்று வலி.
  • வயிற்று வலியுடன் வாந்தி.
  • வயிற்று வலி, வாந்தியுடன் காய்ச்சல்.
  • வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் மஞ்சட்காமாலை.
  • பித்தப்பை கல் சம்பந்தப்பட்ட கணைய அழற்சி.
  • வயிற்று உள் அழற்சி.

பித்தப்பை கற்கள் மஞ்சள் காமாலை காரணங்கள்

பித்தப்பை கற்கள் மஞ்சள் காமாலை காரணங்கள்

  • பித்தக்குழாய் அடைப்பு மஞ்சட் காமாலை
  • இரத்த சிதைவு மஞ்சட் காமாலை.
  • பித்தப்பை அழுகி வரும் மஞ்சட்காமாலை.
  • பித்தப்பை வெடித்து வரும் மஞ்சட்காமாலை.
  • செப்டிசிமியா என்ற இரத்த நுண்ணுயிரிகளால் வரும் மஞ்சட்காமாலை.
  • பித்தப்பை கல்லுடன் சேர்ந்த கல்லீரல் அழற்சியால் வரும் மஞ்சட்காமாலை.

பித்தப்பை கற்கள் அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகள்

பித்தப்பை கற்கள் அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகள்

  • இரத்தக் கல்லீரல் செயல் பரிசோதனை.
  • பொது இரத்தப் பரிசோதனை.
  • இரத்த சர்க்கரை அளவு பரிசோதித்தல் .
  • இரத்த யூரியா மற்றும் கிரியாடினின் அளவு பரிசோதித்தல்.
  • மார்பு எக்ஸ்ரே பரிசோதனை.
  • இருதய பரிசோதனை.

பித்தப்பை கற்கள்- மருத்துவரை சந்திப்பது எப்போது

பித்தப்பை கற்கள்- மருத்துவரை சந்திப்பது எப்போது

  • உணவுக்குப் பின் வரும் வயிற்று வலி.
  • வயிற்று வலியுடன் வாந்தி.
  • கொழுப்பு சத்து மிகுந்த உணவுக்கு பின் அதிக வயிற்று வலி.
  • வயிற்று வலியுடன் மஞ்சட்காமாலை.
  • வயிற்று வலியுடன் கணைய அழற்சி.

பித்தப்பை கல் நகர்வால் ஏற்படும் விளைவுகள்

பித்தப்பை கல் நகர்வால் ஏற்படும் விளைவுகள்

  • பித்தப்பை குழாயை அடைப்பதால் வரும் பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட வயிற்று வலி.
  • பித்தப்பை கற்கள் பித்தக் குழாயினுள்  நழுவி மஞ்சட் காமாலை வருதல் .
  • பித்தக்குழாயின் ஆம்புலா பகுதியை அடைத்து கணைய அழற்சி வருதல்.
  • பித்தப்பை கற்கள் பித்த குழாயை ஊடுருவி மெரிசி சின்ட்ரோம் வருதல்.
  • பித்தப்பை கற்கள் முன் சிறு குடலினுள் ஊடுருவி பித்தப்பை முன் சிறு குடலில் இணைப்பை உருவாக்குதல்.
  • பித்தப்பை கற்கள் மலக்குடலினுள் ஊடுருவி பித்தப்பை மலக்குடல் இணைப்பை உருவாக்குதல்.

பித்தப்பை புற்று வியாதியும் பித்தப்பை கற்களும்

பித்தப்பை புற்று வியாதியும் பித்தப்பை கற்களும்

  • நீண்ட நாளாக இருக்கும் பெரிய பித்தப்பை கற்களால் பித்தப்பை புற்று வியாதி வரலாம்.
  • பித்தப்பை கற்களுடன் பித்தப்பை சதை வளர்ச்சி இருந்தால் பித்தப்பை புற்று வியாதி வரலாம்.
  • பெரும்பாலான பித்தப்பை புற்று வியாதிகள் பித்தப்பை கற்களுடனையே இருக்கின்றன.
  • பி இ டி பரிசோதனை என்பது பித்தப்பை புற்று வியாதியை கண்டறிய பயன்படும் முக்கிய பரிசோதனை ஆகும்.
  • அகன்ற பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையே இதற்கு பரிந்துரைக்கப்படுகின்றது.
  • நோய் மற்ற உறுப்புகளில் பரவியிருந்தால் குணப்படுத்தும் வாய்ப்பு குறைவு.