blog

Home / blog

திறந்த பித்தப்பை அறுவை சிகிச்சை பித்த குழாய் கற்கள் அகற்றுதல் மற்றும் டி குழாய் பொருத்துதல்

திறந்த பித்தப்பை அறுவை சிகிச்சை பித்த குழாய் கற்கள் அகற்றுதல் மற்றும் டி குழாய் பொருத்துதல்

  • பித்தப்பை கற்களுடன் பித்தக்குழாய் கற்களில் இருந்து முன்னாலில் வயிற்றின் மேற்பகுதியில் அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ அல்லது பெரிய பித்தக்குழாய் கற்களாக இருந்தாலோ இம்முறை பரிந்துரைக்கப்படுகின்றது.
  • பித்தக்குழாயை கண்டறிந்து அதை திறந்து அதனுள் இருக்கும் கற்கள் அகற்றப்படுகின்றன.
  • அறுவை சிகிச்சையின் போது செய்யப்படும் கொலஞ்சியோகிராம் அல்லது கோலிடாக்கோஸ்கோப்பி பரிசோதனை கற்கள் முழுமையாக அகற்றப்பட்டதை உறுதி செய்கின்றது.
  • திறக்கப்பட்ட பித்தக்குழாய் டி குழாயின் உதவியுடன் மூடப்படுகின்றது.
  • டி குழாய் கொலஞ்சியோகிராம் பரிசோதனைக்கு பின்பு தான் டி குழாய் அகற்றப்பட வேண்டும்.

திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பித்தக் குழாய் கற்கள் அகற்றுதல் மற்றும் பித்த குழாயை முன் சிறு குடலுடன் இணைத்தல்

திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பித்தக் குழாய் கற்கள் அகற்றுதல் மற்றும் பித்த குழாயை முன் சிறு குடலுடன் இணைத்தல்

  • திறந்த அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை கல்லுடன் பித்தப்பை அகற்றுதல் பித்தக்குழாய் கற்கள் அகற்றுதல் மற்றும் பித்த குழாயுடன் முன் சிறு குடல் இணைக்கப்படுகிறது.
  • பித்தக்குழாயின் கீழ் பகுதி முன் சிறு குடலுடன் இணைக்கப்படுகிறது.
  • மீண்டும் பித்தக் குழாயில் கற்கள் உருவானால் அதை புதிதாக உருவாக்கப்பட்ட மாற்றுப்பாதை வழியாக முன் சிறு குடலை அடையும்.
  • பித்தக்குழாய் ஓரளவு விரிவடைந்து இருந்தால் தான் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
  • சில சமயங்களில் மீண்டும் உருவாகும் பித்தக்குழாய் கற்கள் பித்தக்குழாயின் கீழ் பகுதியில் தங்கி வயிற்று வலி உருவாவதை சம்பு சின்ட்ரோம் என்றழைக்கிறோம்.

திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பித்த குழாய் கற்கள் அகற்றுதல் மற்றும் பித்த குழாய் சிறுகுடல் மாற்றுப் பாதை அறுவை சிகிச்சை

திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பித்த குழாய் கற்கள் அகற்றுதல் மற்றும் பித்த குழாய் சிறுகுடல் மாற்றுப் பாதை அறுவை சிகிச்சை

  • இந்த அறுவை சிகிச்சை அரிதாக செய்யப்படும் பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட பித்தக்குழாய் கற்களுக்காக செய்யப்படுகின்றன.
  • மிரிசி சின்ட்ரோம் என்னும் பித்தக்குழாய் கற்களுக்காக செய்யப்படுகின்றன.
  • பித்தப்பை அகற்றிய பின் அனைத்து பித்தக்குழாய் கற்களும் அகற்றப்படுகின்றன.
  • பித்தக்குழாயில் பெரிய துவாரம் இருக்கும்போது பித்தக்குழாய் ஆனது சிறு குடலுடன் இணைக்கப்படுகிறது.
  • பித்தக்குழாயின் முன் சிறு குடலும் பக்கம் பக்கமாக இணைக்கப்படுகிறது .
  • இந்த அறுவை சிகிச்சை முறையினால் பித்த குழாயில் சுருக்கம் வருவதை தவிர்க்கலாம்.

திறந்த அகல பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

திறந்த அகல பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

  • இந்த அறுவை சிகிச்சை பித்தப்பை புற்று வியாதிக்காக செய்யப்படுகிறது.
  • பித்தப்பையுடன் உள்ளிருக்கும் புற்றுக்கட்டியும் அகற்றப்படுகிறது
  • பித்தப்பையை சுற்றி இருக்கும் இரணகட்டியும், இரண குழாய்களும் அகற்றப்படுகின்றன.
  • பித்தப்பையை சுற்றி இருக்கும் கல்லீரலின் ஒரு சிறு பகுதி அகற்றப்படுகின்றது.
  • அறுவை சிகிச்சையின் போது பித்தப்பையில் ஓட்டை விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பித்தப்பை கட்டி உடலில் மற்ற பாகங்களில் பரவி இருந்தால் இம்முறை அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பித்தப்பை கற்களால் ஏற்படும் சிக்கல்களுக்கு செய்யப்படும் அவசர வடிகால் சிகிச்சைகள்

பித்தப்பை கற்களால் ஏற்படும் சிக்கல்களுக்கு செய்யப்படும் அவசர வடிகால் சிகிச்சைகள்

  • பெர்குயுடேனியஸ் கோலிசிஸ்ட்டாடமி என்பது பித்தப்பை கற்களுடன் பித்தப்பை அழற்சி ஏற்பட்டு நோயாளியின் உடல்நிலை அறுவை சிகிச்சைக்கு உகந்ததாக இல்லாவிட்டால் செய்யப்படும் வடிகால் சிகிச்சை முறையாகும்.
  • பெற்குயுடேனியஸ் டிரான்ஸ் ஹப்பாட்டிக் டிரைன் என்பது பித்தப்பை கல்லுடன் பித்தக்குழாய் கற்களில் இருந்து பித்த குழாயில் தீவிர நுண்ணுயிரியின் தாக்கம் இருக்கும்போது பித்தக்குழாய்க்கு செய்யப்படும் வடிகால் சிகிச்சை முறையாகும்.
  • பொதுவாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியுடன் செய்யப்படுகிறது நோயாளியின் உடல்நிலை மோசமாக இருந்தால் மட்டுமே செய்யப்படுகிறது.
  • இந்த சிகிச்சை முறையில் முக்கிய அம்சமாக நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்ட பித்த நீர் அகற்றுவதன் மூலம் உடலில் உள்ள நுண்ணுயிரியின் பாதிப்பை குறைக்கலாம்.
  • நுண்ணுயிரியின் பாதிப்பு குறைந்த பின் தேவைப்படும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

PTBD என்னும் கல்லீரல் வழியாக பொருத்தப்படும் பித்தக் குழாய் வடிக் குழாய்

PTBD என்னும் கல்லீரல் வழியாக பொருத்தப்படும் பித்தக் குழாய் வடிக் குழாய்

  • இச்சிகிச்சை முறையில் பித்த குழாயில் இருக்கும் நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்ட பித்த நீர் வடிகால் மூலம் அகற்றப்படுகின்றது.
  • இது ஒரு தற்காலிக சிகிச்சை முறையாகும்.
  • பித்தக்குழாய் கற்கள் இ ஆர் சி பி முறையில் அகற்றப்பட முடியாவிட்டாலும் இம்முறை பரிந்துரைக்கப்படுகிறது.
  • பித்தக் குழாயில் உள்ள நுண்ணுயிரியின் தாக்கத்தை குறைப்பதால் நோயாளியின் உடல்நிலை வேகமாக முன்னேறும்.
  • இரத்தம் உறையும் தன்மையில் பாதிப்பு இருந்தால் இந்த சிகிச்சை முறை செய்வது கடினமாகும்.