blog

Home / blog

திறந்தவெளி அழுகிய கணையம் அகற்றுதல்

திறந்தவெளி அழுகிய கணையம் அகற்றுதல்

  • அழுகிய கணையத்துடன் நுண்ணுயிரியின் தாக்கம் இருந்தால் இம்முறை பரிந்துரைக்கப்படுகிறது.
  • வயிற்றின் மேல் நேராக வயிறு திறந்து செய்யப்படுகின்றது.
  • இரத்த ஓட்டமற்ற அழுகிய கணைய பகுதி அகற்றப்படுகின்றது.
  • மெதுவாகவும் கருப்பாகவும் இருக்கும் கணைய பகுதி அழுகிய கணையத்தை குறிக்கின்றது.
  • நோயாளியின் பொது உடல்நிலை மோசமாக இருந்தால் திறந்த அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
  • அழுகிய இடம் அகற்றப்பட்ட பின் நன்றாக கழுவப்பட்டு வடிகால் பொருத்துதல் இந்த சிகிச்சைக்கு இன்றியமையாததாகும்.

கர்ப்ப காலமும் பித்தப்பை கற்களும்

கர்ப்ப காலமும் பித்தப்பை கற்களும்

  • பித்தப்பை கற்கள் கர்ப்ப காலமோ அல்லது அதற்கு பின்னோ வெளிப்படலாம்.
  • பித்தப்பை கற்களின் வெளிப்பாடு குழந்தை பிறப்புக்கு பின் அதிகமாக வெளிப்படுகிறது.
  • பித்தக்குழாய் கற்களின் விகிதமும் அதிகமாக காணப்படுகின்றன.
  • வயிற்றின் மேற்பகுதியில் வயிற்று வலியும், வாந்தியும் குழந்தை பிறப்பிற்கு பின் நிகழ்ந்தால் பித்தப்பை கற்களின் வெளிப்பாடாக இருக்கலாம்.
  • குழந்தை பிறப்பிற்கு பின் மேல் வயிற்றில் வலி வந்தால் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மிக முக்கியமாகும்.
  • பித்தப்பை கற்களும், பித்தக்குழாய் கற்களும் விரைவு சிகிச்சைக்கு உரியவை ஆகும்

பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் உணவு முறைகள்

பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் உணவு முறைகள்

  • பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் அனைத்து உணவும் உண்ணலாம்.
  • பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பாதிக்கப்பட்ட பித்தப்பைக்கே செய்யப்படுகிறது.
  • பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் பித்த உற்பத்தியில் மாறுதல்கள் இல்லை.
  • பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் பித்தக்குழாய் வீங்குவதால் தேவைப்பட்ட பித்த நீர் பித்த குழாயில் தேக்கி வைக்கப்படுகின்றது.
  • கொழுப்புச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை ஜீரணிக்கும் தன்மை பாதுகாக்கப்படும்.
  • பித்தப்பை அகற்றிய பிறகு இணை நோய்கள் இருப்பின் அதற்கேற்ப உணவு மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

பித்தப்பை கற்கள் இல்லாத பித்தப்பை அழற்சி

பித்தப்பை கற்கள் இல்லாத பித்தப்பை அழற்சி

  • பித்தப்பை கல் இல்லாமல் ஏற்படும் பித்தப்பை கல் அழற்சி ஆகும்.
  • பொதுவாக வயதான காலத்தில் காணப்படும்.
  • தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுபவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
  • நீண்ட நாளாகி இருக்கும் சர்க்கரை வியாதியும் ஒரு காரணமாகும்.
  • மாறுபடும் திரவம் செலுத்தி செய்யப்படும் சி டி பரிசோதனை இந்நோயை உறுதிப்படுத்தும்.
  • மருத்துவ சிகிச்சை உதவாவிட்டால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

பித்தப்பை கற்கள் மருத்துவ சிகிச்சை

பித்தப்பை கற்கள் மருத்துவ சிகிச்சை

  • பித்தப்பை கற்களுக்கு அறுவை சிகிச்சையே உரிய சிகிச்சையாகும்.
  • குறிப்பாக இளம் வயதினருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படாவிட்டால் பல சிக்கல்கள் உருவாக்கலாம்.
  • முதியவர்களின் பித்தப்பையில் கற்களில் இருந்து நோயின் வெளிப்பாடு இல்லை என்றால் நோய் வெளிப்படும் வரை அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம்.
  • இளம் வயதினருக்கும் வெளிப்பாடுகளற்ற பித்தப்பை கல்லுடன் கொடிய இணைய நோய்கள் இருப்பின் அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம்.
  • இந்த நோயாளிகளுக்கு உர் சோ டீ ஆக்சிகோலிக் ஆசிட் என்னும் மருந்து வாய் வழியாக கொடுத்து முயற்சிக்கலாம்.
  • பித்தப்பை கல் சம்பந்தப்பட்ட பின் விளைவுகள் இருப்பின் அறுவை சிகிச்சை மிக முக்கியமானதாகின்றது.

தொடர் கணைய அழற்சிக்கு இ ஆர் சி பி  சிகிச்சை முறை

தொடர் கணைய அழற்சிக்கு இ ஆர் சி பி சிகிச்சை முறை

  • தொடர் கணைய அழற்சியால் வரும் பித்தக்குழாய் மற்றும் கணையக்குழாய் பிரச்சனைகளுக்கு இ ஆர் சி பி பரிந்துரைக்கப்படுகிறது.
  • பித்தக்குழாய் சுருக்கத்திற்கு இ ஆர் சி பி மூலம் வடிக்கால் பொருத்தப்படுகின்றது.
  • கணையக்குழாய் சுருக்கம் கணையத்தின் தலைப்பகுதியில் இருப்பின் இ ஆர் சி பி மூலம் வடிகால் பொருத்தலாம்.
  • கணையக் குழாயில் இருக்கும் கற்களையும் அகற்ற முடியும்.
  • பேன்கிரியாடிக் டிவிசம் உள்ளவர்களுக்கு இ ஆர் சி பி மூலம் கணையத்தின் துணைக் குழாயில் வடிகால் பொருத்தப்படுகிறது.
  • இ ஆர் சி பி சிகிச்சை முறைக்கு பின் தொடர் கனைய அலர்ச்சியில் வரும் வலி கனிசமாக குறைகின்றது.