blog

Home / blog

பெர்குடேனியஸ் கோலிசிஸ்டாடமி

பெர்குடேனியஸ் கோலிசிஸ்டாடமி

  • இம்முறையில் பாதிக்கப்பட்ட பித்தப்பை பித்தநீரை வடிக்கலாம்.
  • பித்தப்பையில் இருந்து வடிகால் வெளியில் வைக்கப்படுகின்றது.
  • நுண்ணுயிரியின் தாக்கம் உடல் முழுவதும் இருக்கும் போது இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
  • இச்சிகிச்சை நுண்ணுயிரின் தாக்கத்தை குறைப்பதோடு நோயாளியின் உடல் நிலையிலும் முன்னேற்றத்தை உருவாக்குகின்றது.
  • உடல்நிலையில் முன்னேற்றம் வந்தவுடன் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது.

திடீர் பித்தப்பை கற்கள் சம்மந்தப்பட்ட கணைய அழற்சி

திடீர் பித்தப்பை கற்கள் சம்மந்தப்பட்ட கணைய அழற்சி

  • பித்தக்குழாயின் கீழ்ப்பகுதியில் தேங்கும் கல்லால் கணைய அழற்சி உருவாகிறது.
  • திடீர் கணைய அழற்சியில் அதிக வயிற்று வலியுடன் வாந்தியும் இருக்கும்.
  • பித்தப்பையில் இருந்து நகரும் கற்களே இதற்கு முக்கிய காரணமாகும்.
  • இரத்தத்தில் கணைய நொதிகள் அதிகரிப்பு கணைய அழற்சியை உறுதிப்படுத்துகின்றது.
  • இத்துடன் இரத்தத்தில் கல்லீரலின் நொதிகளும் அதிகமாக காணப்படும்.
  • எம் ஆர் சி பி பரிசோதனை பித்தக்குழாய் கற்களை உறுதிப்படுத்துகின்றன.

பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட கணையஅழற்சியின் பின் விளைவுகள்

பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட கணையஅழற்சியின் பின் விளைவுகள்

  • கணைய அழற்சி பல உறுப்புகளை பாதிக்கலாம்.
  • கணைய அழற்சியால் கணையம் அழுகுவதோடு உடல் முழுவதும் நுண்ணுயிரியின் தாக்கம் வரலாம்.
  • கணையத்தை சுற்றி நீர் கட்டி வரலாம்.
  • கணையத்தினுள் சீழ் பிடிப்பதால் வலியுடன் காய்ச்சலும் வரலாம்.
  • மற்ற உறுப்புகள் பாதிக்கும்போது சிறுநீரகமும் நுரையீரலும் அதிகமாக பாதிக்கின்றன.
  • கணையத்தை சுற்றி உருவாகும் போலி நீர்கட்டி கணைய அழற்சிக்கு சில நாட்களுக்குப் பின் உருவாகின்றன.

லேப்ராஸ்கோபிக் சிஸ்டோ கேஸ்ட்ராஸ்டமி

லேப்ராஸ்கோபிக் சிஸ்டோ கேஸ்ட்ராஸ்டமி

  • கணையத்தை சுற்றி உருவாகும் போலி கணைய நீருக்காக செய்யப்படுகிறது.
  • கணைய அழற்சிக்கு 6 வாரங்களுக்கு பின் செய்யப்படுகின்றது.
  • போலி கணைய நீரும் இரைப்பையும் இணைக்கப்படுகிறது.
  • போலி கணைய நீர் நிரந்தரமாக இரைப்பையினுள் வடிகின்றது.
  • கணையத்தில் இருக்கும் அழுகிய கணைய பகுதிகளும் அகற்றப்படுகின்றது.

திறந்த சிஸ்டோ கேஸ்ட்ராஸ்டமி

திறந்த சிஸ்டோ கேஸ்ட்ராஸ்டமி

  • போலி கணைய நீர் இரைப்பைக்குள் வடிய வழி செய்கின்றது.
  • வயிற்றின் மேல் பகுதியில் நேராக திறந்து இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது.
  • நுரையீரல் பாதிப்புள்ளவர்களுக்கு திறந்த அறுவை சிகிச்சை சிறந்ததாகும்.
  • போலி கணைய நீர் இரைப்பையின் பின்புறம் வழியாக திறக்கப்படுகின்றது.
  • நீர் கட்டியினுள் இருக்கும் அழுகிய சதைப்பகுதி அகற்றப்படுகின்றது.
  • இரைப்பையின் பின்பகுதியுடன் போலி கணைய நீர் சுவர் பகுதி இணைக்கப்படுகின்றது.

கணைய அழற்சி லேப்ராஸ்கோபிக் அழுகிய கணையம் அகற்றுதல்

கணைய அழற்சி லேப்ராஸ்கோபிக் அழுகிய கணையம் அகற்றுதல்

  • நுண்ணுயிரியால் தாக்கப்பட்ட அழுகிய கணையத்திற்கு செய்யப்படும் சிகிச்சை முறையாகும்.
  • உடலில் நுண்ணுயிரியின் தாக்கம் பரவி இருந்தால் இந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • உடல்நிலை சீராக இருந்தால் லேப்ராஸ்கோப்பி முறை பரிந்துரைக்கப்படுகின்றது.
  • இரத்த ஓட்டம் இல்லாத அழுகிய கணையப்பகுதி அகற்றப்படுகின்றது.
  • அழுகிய இடத்தை கழுவுதலும், வடிகால் பொருத்துதலும் இந்த சிகிச்சை முறையில் முக்கிய அம்சமாகும்.